Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தளபதி விஜயின் வெற்றிக்கு முக்கிய காரணம் விஜயகாந்த்



இன்று தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட  நடிகர்களில் முக்கியமானவர் இளைய தளபதி விஜய். இவர் 1992 ம் ஆண்டு நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் .இந்த படம் சரியாக ஓடவில்லை.

இதனால் இவரது அப்பா எஸ்.ஏ.ராஜசேகர் இவருடைய மாஸ் ஹூரோ விஜயகாந்திடம் தன் மகன் விஜயுடன் ஒரு படம் நடித்து தாருங்கள் என்று விஜயகாந்திடம் கேட்டார்.அதற்கு விஜயகாந்த் உடனே தான் நடித்து தருகிறேன் என்று மறுக்காமல் கூறினார்.இந்த படத்திற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.ஆனால் விஜயகாந்த் முதலில் சூட்டிங் ஆரம்பிக்கட்டும் அதன்பின் பார்த்துகொள்ளலாம் என்றார்.

அப்படி உருவான படம்தான் "செந்தூரபாண்டி".இந்த படத்தின் மூலமாக விஜய் ,தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் அனைவருக்கும் தெரியவந்தார்.

அதன்பின் தொடர்ந்து "தேவா,கோயமுத்தூர் மாப்பிள்ளே" போன்ற படங்களிலும் நடித்தார்."பூவே உனக்காக" அந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் விஜயகாந்த் தான் விஜயின் வெற்றிகாரணம் ஆவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தின் திரையுலகில் 40 ஆண்டுகள் பயணம் மேற்கொண்டதற்காக விழா நடைபெற்றது . இந்த விழாவில் அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் அனைவரிடமும் பகிருங்கள்.

                          நன்றி......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக